Thursday 16 March 2017

Muthra Loan Scheme for Business

முத்ரா வங்கி திட்டம்:

சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களுக்கு கடன் வழங்குவதற்காக 'முத்ரா வங்கி' திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

கடந்த மத்திய பட்ஜெட்டில் சிறு மற்றும் குறு தொழில் முனைவோருக்கு கடன் வழங்குவதற்காக 'முத்ரா வங்கி' தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கும் 'முத்ரா வங்கி' திட்டத்தை பிரதமர் மோடி, இன்று டெல்லி விஞ்ஞான் பவனில் நடந்த நிகழ்ச்சியின்போது தொடங்கி வைத்தார்.
சிறு தொழில் முனைவோருக்கான 'முத்ரா வங்கி' திட்டம் தொடக்கம்!

 சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களுக்கு கடன் வழங்குவதற்காக 'முத்ரா வங்கி' திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

கடந்த மத்திய பட்ஜெட்டில் சிறு மற்றும் குறு தொழில் முனைவோருக்கு கடன் வழங்குவதற்காக 'முத்ரா வங்கி' தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கும் 'முத்ரா வங்கி' திட்டத்தை பிரதமர் மோடி, இன்று டெல்லி விஞ்ஞான் பவனில் நடந்த நிகழ்ச்சியின்போது தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், ''நாட்டின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. சிறு தொழிலை ஊக்குவிப்பதுதான் நாட்டின் தற்போதைய தேவையாக இருக்கிறது. இதற்காக ரூ.200 கோடி முதலீட்டில் 'முத்ரா வங்கி' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் காய்கறி வியாபாரிகள் உள்ளிட்ட சிறு வணிகர்கள் கடன் உதவி பெறலாம். மேலும், சிசு திட்டத்தில் ரூ.50 ஆயிரம் வரையும், கிஷோர் திட்டத்தில் ரூ.5 லட்சம் வரையும், தருண் என்ற திட்டத்தில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சிறு தொழில் முனைவோர்களுக்கு கடன் உதவி வழங்கப்படும்.

இதன் மூலம் மொத்தம் 5.77 கோடி சிறு மற்றும் குறு வணிகர்கள் பயன் அடைவார்கள். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூலம் நாட்டில் 12 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும், 'முத்ரா வங்கி' திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கும் உதவிகள் வழங்கப்படும்'' என்றார் .