Wednesday 5 April 2017

பான்கார்டு பெறுவது எப்படி?

பான்கார்டு பெறுவது எப்படி?
******************************************
வங்கிக் கணக்குத் தொடங்குவதற்கும், பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கும் அடிப்படைத் தேவை பான் கார்டு (PAN card – Permanent Account Number Card) எனப்படும் நிரந்தர கணக்கு எண் அட்டை. பான் கார்டுக்கு எங்கே விண்ணப்பிப்பது? குழந்தைகளுக்கும் வாங்க முடியுமா? பான் கார்டு தொலைந்துவிட்டால் என்ன செய்வது? ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது போன்ற தகவல்கள் இங்கே பார்ப்போமா?

பான்கார்டு என்பது என்ன? 
ஆங்கில எழுத்துக்களும், எண்களும் கலந்த பத்து இலக்க எண் கொண்ட புகைப்பட அடையாள அட்டையாகும். இது இந்திய அரசின் நிதி அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது.

பான் கார்டின் அவசியம்:
வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய பங்குகளை வாங்க மற்றும் விற்பதற்கான டீமேட் கணக்கைத் துவக்க, வங்கியின் ஒரு கணக்கிலிருந்து மற்றொன்றுக்கு 50,000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை மாற்ற / டெபாசிட் செய்ய / கணக்கிலிருந்து எடுக்க, மற்றும் வரி கழித்த தொகையினை திரும்பப் பெற ஆகியவற்றுக்கு பான்கார்டு அவசியம்.

பான் கார்டு பெறுவதற்கான தகுதிகள்: 
இந்திய குடிமக்கள் அனைவருமே பான்கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். பான் கார்டு பெறுவதற்கு வயது வரம்பு இல்லை. குழந்தைகளுக்குக் கூட பான்கார்டு பெற முடியும். பான் கார்டு பெறுவதற்கு ஒரு குழுமமோ, நிறுவனமோ, சங்கமோ, தனிநபரோ விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்:
இந்தியாவில் வசிப்பவர்களுக்கு 105 ரூ கட்டணமும், வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு 962 ரூ கட்டணமும் பெறப்படுகிறது. ஏஜெண்டுகள் மூலம் விண்ணப்பித்தால் 250ரூ முதல் 300ரூ வரை செலவாகும்.

எங்கே விண்ணப்பிப்பது?
 மத்திய வருமான வரித்துறையின் அங்கீகாரம் பெற்ற யூ.டி.ஐ.டெக்னாலஜி சர்வீஸ் லிமிடெட் நிறுவனம் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் இதற்கான சேவை மையங்களைத் திறந்துள்ளது. இங்கு சென்று நேரடியாக விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம். இந்தியர்கள் 49ஏ என்ற விண்ணப்பத்தையும், வெளிநாட்டில் வசிப்பவர்கள் 49ஏஏ என்ற விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பப்படிவத்தை https://www.tin-nsdl.com/என்ற தளத்திற்குச் சென்றும் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள்:
பான் கார்டு பெற அடையாளச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று மற்றும் பிறந்த தேதி சான்று தேவை.
அடையாள மற்றும் இருப்பிடச் சான்றாக வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

 இருப்பிடச் சான்றாக கடைசி 3 மாதங்கள் செலுத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி கட்டண பில்கள் போன்றவற்றின் நகல்களைக் கொடுக்கலாம்
பிறந்த தேதிச் சான்றாக பிறப்புச் சான்றிதழ் அல்லது பள்ளிச் சான்றிதழ் கொடுக்கலாம்.
விண்ணப்பிப்பவர் 18 வயதுக்குக் குறைவான மைனராக இருந்தால் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் சான்றிதழ்கள் போதுமானவை. மைனர் விண்ணப்பதாரருக்குப் பிறப்புச் சான்றிதழ் கொடுக்க வேண்டும்.
ஒரு வேளை மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், கெசட்டட் ஆபீசர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.

மீண்டும் பான்கார்டு பெற:
ஏற்கனவே பான்கார்டு வழங்கப்பட்டு ஒருவேளை தொலைந்து போயிருந்தால் அல்லது  சேதமாகியிருந்தால்  அதே பான்நம்பரை வைத்து புதிய பான்கார்டு பெற 
 மீண்டும் விண்ணப்பிக்கலாம். இதற்கும் மேற்கூறிய சான்றுகள் தேவை. புதிய பான் கார்டுக்கான கட்டணமே இதற்கும் பொருந்தும். அப்படிப் பெறும்போது ஏற்கனவே உள்ள எண்ணே வழங்கப்படும்.


பான்கார்டில் பெயர் மாற்றமோ, பிறந்த தேதி மாற்றமோ, வேறு திருத்தங்களோ செய்ய வேண்டுமெனில் அதற்கான ஆதாரங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே பான் நம்பர் வைத்திருப்பவர்கள் மீண்டும் மற்றுமொரு பான் நம்பரைப் பெற முடியாது. அப்படி பெறுவதும் / வைத்திருப்பதும் சட்டப்படிக் குற்றமாகும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க:
ஆன்லைனில் http://www.myutiitsl.com/PANONLINE/ இத்தளத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எப்படி அனுப்புவது என்ற விவரமும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும். கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை உள்ளிட்டு அதை சரிபார்த்து பின் உறுதி செய்து அதை பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். அதில் கையெழுத்திட்டு அத்துடன் ஒரு புகைப்படத்தையும், தேவையான சான்றுகளையும் இணைத்து தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
PAN PDC Incharge – Chennai region
UTI Infrastructure Technology And Services Limited
STC Trade Centre, First Floor, A-29,
Thiru- Vi- Ka Industrial Estate, Guindy
CHENNAI – 600032
Tel No:(044) 22500426

உங்கள் விண்ணப்பத்தின் நிலையறிய :http://www.myutiitsl.com/PANONLINE/panTracker.doஇத்தளத்திற்கு சென்று கூப்பன் எண்ணைக் கொடுத்து தெரிந்து கொள்ளலாம். அல்லது PAN என டைப் செய்து சிறிது இடைவெளிவிட்டு 15 இலக்க அக்னாலெட்ஜ்மெண்ட் எண்ணை டைப் செய்து 53030 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம்.

மேலதிக விவரங்களுக்கு:

அருகிலுள்ள பான்கார்டு விண்ணப்பங்களைப் பெறும் மையங்களைத் தொடர்பு கொள்வதற்குhttp://www.myutitsl.co.in/intra/web/search_psa.jspஎன்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் பகுதியை அல்லது ஊரை க்ளிக் செய்தால் தொடர்பு முகவரியையும், தொலைபேசி எண்ணையும் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களை அறிந்துகொள்ளhttps://www.tin-nsdl.com/ அல்லதுhttp://www.utitsl.co.in/ ஆகிய தளங்களுக்குச் செல்லவும்.

Private and Government Schemes For Loans




முத்ரா கடன் திட்டம் என்றால் என்ன ?

இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.10,00,000/- வரை (பத்து லட்சம்) சொத்து பணயம் இல்லாத வங்கி கடன் பெறும் திட்டம் ஆகும்.

சிறு தொழில்களுக்கு நமது நாட்டில் வங்கிக் கடன் கிடைப்பதில்லை. நாட்டில் உள்ள 5.77 கோடி சிறு தொழில்கள்,வங்கிகள் மூலம் முழுப்பயனை அடைவதில்லை; இதில், 4 சதவீத தொழில்களே, வர்த்தக வங்கிகளிடமிருந்து கடன் பெறுகின்றன என, மத்திய அரசின் கணக்கெடுப்பில் தெரியவந்தது.

வங்கிக்கடன் கிடைக்காததால்  சிறுதொழில் செய்பவர்கள் தனியார் நிதி நிறுவனங்களை நாடுகின்றனர். அங்கு,அதிக வட்டியில் கடன் பெறுவதால், இத்தொழில்களால் எதிர்பார்த்த வளர்ச்சியை பெற முடியவில்லை என்பதை அறிந்த மத்திய அரசு தனது பட்ஜெட்டில்முத்ராவங்கி திட்டத்தை  அறிவித்தது.

இதன்மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு வர்த்தக வங்கிகள் வழங்கும் கடன் தொகையை மறு நிதியாக அந்த வங்கிகளுக்கு முத்ரா வங்கி அளித்துவிடும் என அறிவிக்கப்பட்டது. கடந்த 08.04.2015 தேதி முத்ரா வங்கியை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் துவக்கி வைத்தார். நாடு முழுவதிலும் முத்ரா வங்கி அலுவலகங்கள் திறக்கப் பட்டுள்ளன.


பத்து லட்சத்திற்கும் குறைவான அளவு கடன் தேவைப்படும் பண்ணை தொழில் சாரா உற்பத்தி நிறுவனங்கள், வர்த்தக மற்றும் சேவை நிறுவனங்கள் சொத்து பணயம் இல்லாமல் கடன் பெறுகின்ற திட்டம். இது தனிநபர் கடன் திட்டம் அல்ல. தொழில் நடத்துவதற்கு வழங்கப்படும் தொழில் கடன் திட்டம்.

Monday 20 March 2017

Documents For Getting Mudra Loan



முத்ரா கடன் பெற தேவையான ஆவணங்கள் என்னென்ன ?

         1.  MUDRA Loan Application
2.     Business plan
3.     Proof of Identity like PAN / Drivers License / Aadhaar Card / Passport and more.
4.     Residence proof like recent telephone bill / electricity bill or property tax receipt and more.
5.     Applicant’s recent photograph less than 6 months old
6.     Quotation of machinery or other items to be purchased
7.     Name of supplier or details of machinery or prices of machinery
8.     Proof of identity / address of the business like tax registration, business license and more.
9.     Proof of category like SC/ST/OBC/Minority, if applicable.  
       

Saturday 18 March 2017

Business Loans For SMES

முத்ரா அட்டை:

இத்திட்டம் மூலம் கடன் கிடைத்தவுடன் பயனாளிக்கு அதற்கான முத்ரா   அட்டை வழங்கப்படும்இந்த அட்டையை மூலப்பொருட்கள் வாங்கும் 
போது கிரடிட் கார்டு போல பயன்படுத்தலாம்.இந்த கார்டு மூலமாக கடன்   தொகையில் 10% அதிகபட்சம் Rs.10,000 வரை பயன்படுத்தலாம்.

கடன் வழங்குவதற்கு மறுத்தால்....
வங்கி மேலாளர் உங்களுக்கு சரியான பதில் அளிக்கவோ அல்லது கடன்   மறுக்கும் பட்சத்திலோ நீங்கள் வங்கியின் உயர் அதிகாரியை அணுகலாம்.  வங்கியின் உதவி பொது மேலாளர் மற்றும் இந்ததிட்டத்தில் வரும்   குறைகளை விசாரிக்க உள்ள அதிகாரிகளை அணுகலாம்.. 

 உங்கள் மாவட்ட முத்ரா வங்கியின் அலுவலகத்தினை அணுகலாம்.
முக்கிய குறிப்பு:
1.வங்கியின் மேலாளரை அனுமதி பெற்று பின் சென்று பார்க்கவும்   மாலை 4.00 மணிக்கு மேல் அனுமதி பெற்றுபார்த்தல் நல்லது
2.மேலாளரை பார்க்கும் போது அனைத்து நகல்களுடன் பார்ப்பது 
நல்லதுநீங்கள் வேண்டுகின்ற கடன் தேவைக்கு சரியான 
விளக்கத்தை   அவரிடம் தருவதற்கு தயாராகசெல்லுங்கள்.
3.மேலாளரின் முடிவே இறுதியானது.
4.மேலும் விவரங்களுக்கு www.mudra.org.in என்ற இனையதளத்தில்       பார்க்கவும்.

நோடல் அதிகாரிகளின் பெயர்முகவரி மற்றும் தொடர்பு எண்கள்
அனைத்தும் மேற்கண்ட இணையதளத்தில் உள்ளது.

Unsecured Business Loans and Banks

கடன் வழங்கும் வங்கிகள்
  •  27 Public Sector Banks
  •  17 Private Sector Banks
  •  31 Regional Rural Banks (RRBs)
  • 04 Co-operative Banks
  • 36 Micro Finance Institutions (MFIs)
  • 25 Non Banking Financial Companies (NBFCs)
விண்ணப்பத்தில் என்னென்ன ஆவணங்கள் இணைக்கவேண்டும்?
1) அடையாள சான்று ( வாக்காளர் அட்டைஓட்டுனர் உரிமம்,பான் கார்டு
ஆதார் அட்டைபாஸ்போர்ட்)
2) இருப்பிட சான்று (நடப்பு மாதத்தில் கட்டிய தொலைபேசி ரசீது,அல்லது 
மின்சார கட்டண ரசீது அல்லது வீட்டு வரி ரசீது)
3) சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.

4) இயந்திரம் மற்றும் இதர உபகரணங்கள் வாங்குவதற்கான 
விலைப்பட்டியல் ரசீது Quotation 

5) சப்ளையர் விபரங்கள்

6) தொழிற்சாலை இருக்கும் இடம் மற்றும் அதன் உரிமம்

7) .பி.சிசாதிச் சான்றிதழ்

மேற்கண்ட விபரங்கள் தவிர சில வங்கிகள் அவர்களின்விதிமுறைகளுக்கு
 ஏற்ப இன்னும் சில தேவையான சான்றிதழ்களை தங்களிடம் கேட்பதற்கு
 வாய்ப்புண்டு.