Wednesday 5 April 2017

Private and Government Schemes For Loans




முத்ரா கடன் திட்டம் என்றால் என்ன ?

இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.10,00,000/- வரை (பத்து லட்சம்) சொத்து பணயம் இல்லாத வங்கி கடன் பெறும் திட்டம் ஆகும்.

சிறு தொழில்களுக்கு நமது நாட்டில் வங்கிக் கடன் கிடைப்பதில்லை. நாட்டில் உள்ள 5.77 கோடி சிறு தொழில்கள்,வங்கிகள் மூலம் முழுப்பயனை அடைவதில்லை; இதில், 4 சதவீத தொழில்களே, வர்த்தக வங்கிகளிடமிருந்து கடன் பெறுகின்றன என, மத்திய அரசின் கணக்கெடுப்பில் தெரியவந்தது.

வங்கிக்கடன் கிடைக்காததால்  சிறுதொழில் செய்பவர்கள் தனியார் நிதி நிறுவனங்களை நாடுகின்றனர். அங்கு,அதிக வட்டியில் கடன் பெறுவதால், இத்தொழில்களால் எதிர்பார்த்த வளர்ச்சியை பெற முடியவில்லை என்பதை அறிந்த மத்திய அரசு தனது பட்ஜெட்டில்முத்ராவங்கி திட்டத்தை  அறிவித்தது.

இதன்மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு வர்த்தக வங்கிகள் வழங்கும் கடன் தொகையை மறு நிதியாக அந்த வங்கிகளுக்கு முத்ரா வங்கி அளித்துவிடும் என அறிவிக்கப்பட்டது. கடந்த 08.04.2015 தேதி முத்ரா வங்கியை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் துவக்கி வைத்தார். நாடு முழுவதிலும் முத்ரா வங்கி அலுவலகங்கள் திறக்கப் பட்டுள்ளன.


பத்து லட்சத்திற்கும் குறைவான அளவு கடன் தேவைப்படும் பண்ணை தொழில் சாரா உற்பத்தி நிறுவனங்கள், வர்த்தக மற்றும் சேவை நிறுவனங்கள் சொத்து பணயம் இல்லாமல் கடன் பெறுகின்ற திட்டம். இது தனிநபர் கடன் திட்டம் அல்ல. தொழில் நடத்துவதற்கு வழங்கப்படும் தொழில் கடன் திட்டம்.